புஜைராவின் கடல் பகுதியில் இன்று மிக அபூர்வமான நிகழ்வு ஒன்று நேர்ந்திருக்கிறது. கடல் பரப்பிலிருந்து தண்ணீர் மேலெழுந்து அதனை மேகங்கள் உறிஞ்சும் காட்சியை தேசிய வானிலை ஆய்வுமையம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இதிலென்ன பிரமாதம் என்கிறீர்களா? அமீரக கடல்களைப் பொறுத்தவரையில் இப்படி, மேகங்கள் நீரை உறிஞ்சுவது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் இம்மாதிரி நடைபெற கூடிய சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.
வானிலையில் ஏற்படும் அதி தீவிரமான மாற்றங்கள் இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருக்கலாம். சுழல் வடிவில் நீரினை உறிஞ்சும் மேகங்கள் நகர்வதில்லை. அதாவது ஒரே இடத்திலிருந்து நீரை அதிவேகத்தில் உறிஞ்சும் தன்மை கொண்டவை இவை. இதன்காரணமாக அப்பகுதியில் இருக்கும் வெசல்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
View this post on Instagram
அதே நேரத்தில் இன்று புஜைராவில் சில இடங்களில் கனமழையும் பெய்தது. நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமிருப்பதாக வானிலை ஆய்வுமையம் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
