அமீரகத்தில் இன்று புழுதிப்புயல் ஏற்படும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தின் இன்றைய மேகமூட்டத்துடன், அவ்வபோது தூசி நிறைந்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் இன்று இரவு மற்றும் திங்களான நாளை காலை நாட்டின் சில கிழக்கு உட்பகுதிகளில் மூடுபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fresh to strong Northwesterly winds, reaching 60 Km/h and rough sea to very rough with wave height reaching 10 Ft in Arabian Gulf offshore, from 00:30 Sunday 27/03/2022 until 00:30 Monday 28/03/2022. pic.twitter.com/NU0yAMQ007
— المركز الوطني للأرصاد (@NCMS_media) March 26, 2022
சில சமயங்களில் காற்று கடுமையாக இருக்கும் என்றும், கடற்கரையில் வீசும் காற்றின் காரணமாக தூசி வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடாவில் சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் 10 அடி வரை அலைகள் உயரும் என்றும் தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.