UAE Tamil Web

“சரியான நேரத்தில் அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளுங்கள்” – சுகாதாரத்துறை வலியுறுத்தல்..!

booster

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்த ஆறு மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது அரசு.

அமீரக சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரீதா அல் ஹோசாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அனைவரும் உரிய நேரத்தில் பூஸ்டர் டோசினை எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

faridha hosani
Image Credit: WAM

இதுகுறித்து அவர் பேசுகையில்,” காலந்தாழ்த்தாமல் சரியான நேரத்தில் அனைவரும் பூஸ்டர் டோசினை எடுத்துக்கொள்ள நாங்கள் அறிவுறுத்துகிறோம். முக்கியமாக வயதானவர்கள் மற்றும் நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap