UAE Tamil Web

அமீரகத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.. NCEMA அறிவிப்பு

அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.

அதன் எதிரொலியாக அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விலக்கியுள்ளது அரசு. அதாவது இனி அமீரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசர நெருக்கடி மற்றும் தேசிய ஆணையத்தின் பேரிடர் மேலாண்மையான (NCEMA) அறிவித்துள்ளது.

ஆனால் துபாயில் பொது உட்புற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிவேண்டும் என்று NCEMA தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி கோவிட்-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் இனி தனிமைப்படுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக 5 நாட்கள் கழித்து இரண்டு PCR பரிசோதனையை செய்ய வேண்டும் என்றும் NCEMA அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும் அவசியத்தின்போது சமுக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிவது போன்ற விதிகளை அந்தந்த எமிரேட்கள் விரும்பினால் செயல்படுத்தலாம் என்றும் NCEMA குறிப்பிட்டு உள்ளது

NCEMA அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் மற்றும் கட்டுப்பட்டு தளர்வுகள் இன்று பிப்ரவரி 26 முதல் அமலுக்கு வந்துள்ளது.

35 Shares
Share via
Copy link