UAE Tamil Web

கனமழை, அதிவேக தூசுக் காற்று என அடுத்தடுத்து எச்சரிக்கை அளித்த வானிலை ஆய்வு மையம்..!

rainfall

அமீரகத்தில் இன்று வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி செல்சியஸில் இருக்கும் எனவும், நாட்டில் பரவலாக மழை பொழியலாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

பொதுவாக நாட்டில் பகுதி மேகமூட்டம் இருக்கும் எனவும் கடலோரப் பகுதிகள் மற்றும் கிழக்கு மற்றும் வடக்கு எமிரேட்களில் வானமானது மேகமூட்டமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெப்பநிலை குறைந்து, மழை பொழியும் என NCM தெரிவித்திருக்கிறது.

கடற்பகுதிகளில் காற்று கடுமையாக வீசும் எனவும், இதன் காரணமாக புழுதிப் படலம் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

வானிலை எச்சரிக்கை காலை 6.45 முதல் 11 மணிவரையிலும் விடுக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவில் கடல் கடுமையான சீற்றத்துடனும் ஓமான் கடலில் மிதமானது முதல் அதிக சீற்றத்துடனும் கடல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.