fbpx
20.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

எச்சரிக்கை: மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் புழுதிக்காற்று வீசும் – வானிலை ஆய்வுமையம்..!

Closure-Dust-IMG-jpg

அமீரகத்தில் இன்று காலை 3 மணிமுதல் 9.30 மணிவரையில் பனிமூட்டம் ஏற்படும் எனவும் இதனால் சாலைகள் புலப்படுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே வாகனவோட்டிகள் கவனமுடன் செயல்படுமாறு தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்திருக்கிறது.

இதனையடுத்து அபுதாபி காவல்துறையினர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் திரையிடப்படும் வேக அளவுகளை பின்பற்றுமாறும் கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறும் வாகனவோட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய நாளில் பொதுவாக சூரிய ஒளி மிகுந்தும், தீவு மற்றும் வடக்குப் பிராந்தியத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். இதன் காரணமாக மழை பொழிய வாய்ப்பிருக்கிறதாகவும் NCM தெரிவித்திருக்கிறது.

நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருக்கும். அதேநேரத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை வேளையில் சில பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிக் காற்று

மேற்கிலிருந்து வட மேற்கு நோக்கி மிதமாக காற்று வீசும். மதியத்திற்கு மேலே வேகம் கூடி மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனவும், இதனால் தூசு படலம் உருவாகலாம் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

அரேபிய வளைகுடாவைப் பொறுத்தவரையில் மிதமானது முதல் மதியத்திற்கு மேல் சீற்றம் மிகுந்தும் காணப்படும். ஓமான் கடல் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!