UAE Tamil Web

அமீரகத்தில் கடும் பனிமூட்டம் – வெப்பநிலை 13.1 டிகிரிக்குக் குறைந்தது..!

FogAlert

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் கடும் பனிப்புகை ஏற்பட்டிருப்பதால் வாகனவோட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், சீ ஷூயிப், துபாய் – அல் அய்ன் சாலை ஆகியவற்றில் அதிகாலையில் பனிமூட்டம் ஏற்பட்டது.

நாட்டின் உட்பகுதிகள், கடலோரப் பகுதிகள், குறிப்பாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் காலை 12.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும் கடும் பனிமூட்டம் ஏற்படும். ஆகவே வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது.

இன்றைய நாளைப் பொறுத்தவரையில் உட்பகுதிகள் மற்றும் கடலோரப்பகுதிகளில் பகுதி மேகமூட்டமாகவும், பனிமூட்டமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் குறைந்த வெப்பநிலை அதிகாலை 5.15 மணிக்கு ரக்னாஹ் (Raknah) வில் 13.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது.

உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33°C – 36°C ஆகவும், கடலோரப்பகுதிகளில் 30°C – 34°C ஆகவும், மலைப்பகுதிகளில் 27°C – 31°C ஆகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவில் கடலானது காலை நேரத்தில் மிதமானது முதல் சீற்றம் மிகுந்தும், ஓமான் கடல் லேசானது முதல் மிதமானது வரையிலும் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.