UAE Tamil Web

அமீரகத்தைச் சூழ்ந்த கடும் பனிமூட்டம்: வானிலை ஆய்வுமையம், காவல்துறை விடுத்த எச்சரிக்கை..!

FOG

அமீரகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்று கடும் பனிமூட்டம் ஏற்படும் எனவும் இதனால் சாலைகள் கண்ணுக்குத் தெரிவதில் சிரமம் ஏற்படலாம் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது. ஆகவே வாகனவோட்டிகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்குமாறும் NCM தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

துபாய் – அல் அய்ன் சாலை, அபுதாபி – அல் அய்ன் சாலை மற்றும் ஸ்வெய்ஹான் – அல் ஹயர் சாலைகளில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

துபாய் – அல் அய்ன் சாலையின் அருகே அமைந்துள்ள அல் லுசைலி மேம்பாலம் மற்றும் அல் குத்ரா பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனவோட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு துபாய் காவல்துறை எச்சரித்திருக்கிறது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள NCM, அல் அய்ன் சர்வதேச விமான நிலையம், பனி யாஸ் – அல் வத்பா சாலை, அல் ஷஹமா மற்றும் அல் அய்னின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகளவில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது.