fbpx
UAE Tamil Web

“அமீரகத்தின் இந்தப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்” – அமைச்சகம் எச்சரிக்கை..!

FLOOD UAE

பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளத்தின்போது மலைப்பகுதிகள் வழியாக செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் என அமீரக ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்புத்துறை அமைச்சகம் (MoEI) தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,”மழை மற்றும் வெள்ள நேரங்களில் மலைப்பகுதிகளை கடந்து செல்வது மிகவும் ஆபத்தானது. ஆகவே, மக்கள் கவனமுடன் செயல்படவேண்டும். உங்களுடைய பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய வானிலை ஆய்வு மைய (NCM) செய்தித் தொடர்பாளர்,” இலையுதிர்காலம் முடிவடைந்து கார்காலம் துவங்கியிருப்பதால் காலநிலை மாற்றத்திற்கு உட்படுகிறது. இந்நேரத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது முக்கியமாகும்” எனத் தெரிவித்தார்.

நேற்று புஜைராவின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. (வீடியோவைக்கான இங்கே கிளிக் செய்யவும்) NCM வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வெப்பநிலை குறைந்து நாட்டின் வட பகுதியில் மழைப் பொழிவு ஏற்படலாம் என NCM அறிவித்திருக்கிறது. அதேபோல, செவ்வாய்க்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அரேபிய வளைகுடா பகுதியில் மிதமானது முதல் கடுமையான சீற்றம் இருக்கும் மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் கடல் சீற்றம் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.