UAE Tamil Web

அவசர செய்தி: 7 அடி வரையில் கடலலைகள் எழும் – மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்ட வானிலை ஆய்வுமையம்..!

-rough-seas_

அமீரகத்தில் இன்று வானம் பகுதி மேகமூட்டமாக காணப்படும் எனவும் நாட்டின் கிழக்குப்பகுதியில் மேகங்கள் ஒன்றிணையும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

குறிப்பாக புஜைராவில் வானமானது பகுதி மேகமூட்டமாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சராசரியாக 30 டிகிரி வெப்பநிலை நிலவும்.

இன்று காற்றானது மணிக்கு 20 – 30 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம் என NCM தெரிவித்திருக்கிறது.

அரேபிய வளைகுடாவில் கடும் காற்று காரணமாக 6 முதல் 7 அடி வரையில் அலைகள் எழலாம் எனவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் எனவும் NCM தெரிவித்திருக்கிறது.

கடல் சீற்றம் காரணமாக இன்று பிற்பகல் 1 மணிவரையிலும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்று, புழுதி மற்றும் மணலை சுமந்து வீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிக் காற்று காரணமாக சாலைகள் சரிவரத் தெரியாது என்பதால் வாகனவோட்டிகள் கவனமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூசுக்காற்றினால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் வெளியே செல்லும்போது அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.