ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் ஈரப்பதமான மற்றும் தூசு நிறைந்த ஒரு வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும், வரும் நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
NCM இன்று ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாளை திங்களன்று கடலோரப் பகுதிகளில் வானிலை ஈரப்பதமாக இருக்கும் என்றும், பொதுவாக சில பகுதிகளில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் இயல்பாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அமீரகத்தில் மிதமான வகையில் தென்கிழக்காக மாறும் வடமேற்கு காற்று, அவ்வப்போது நமக்கு ஒரு புத்துணர்வையூட்டி வருகின்றது என்றே கூறலாம். மேலும் வரும் வாரங்களில் பகல் நேரத்தில் தூசி வீசும் என்றும், அது 15 – 25 வேகத்தில் இருந்து மணிக்கு 35 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
வரும் வாரத்தின் செவ்வாய் முதல் வியாழன் வரை, வானிலை குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நிலவும் வானிலை, பனி அல்லது மூடுபனியை உருவாக்கும் என்றும் காலை நேரத்தில் ஈரப்பதமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நாட்களின் பகல் பொழுது பொதுவாக சூடாகவும், சில உள் பகுதிகளில் பகல் நேரத்தில் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வசிப்பவர்கள், புத்துணர்ச்சியூட்டும் மிதமான தென்கிழக்கு மற்றும் வடமேற்கு காற்றை சில நேரங்களில் எதிர்பார்க்கலாம், மேலும் பகல் நேரத்தில் குறிப்பாக மேற்கு நோக்கி தூசி கற்று வீசும் என்றும், 15 – 25 துவங்கி 40 கிமீ வேகத்தை எட்டும் என்றும் கூறப்படுகிறது.