இன்று காலை அமீரகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
ஆய்வுமையத்தின் ட்விட்டர் பதிவின் அடிப்படையில், தெற்கு அசாப் மற்றும் மெசைரா பகுதிகள் மற்றும் அல் தஃப்ரா பகுதியில் உள்ள ஔதைத் (Owtaid) ஆகிய பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மழை பொழியலாம் என குடியிருப்பாளர்களுக்கு வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
இம்முறையின் காரணமாக இந்த வாரம் முழுவதும் மழையானது பொழியும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச வெப்பநிலையாக அல் அய்னில் உள்ள ரக்னா பகுதியில் இன்று காலை 06:30 மணிக்கு 10.7°C வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
أمطار خفيفة على جنوب عصب / جنوب مزيرعة (منطقة الظفرة)
Light rain over South of Asab / South of Mezaira (Al Dhafra region)#أمطار #أمطار_الخير #استمطار #تلقيح_السحب #المركز_الوطني_للأرصاد#Rain #Cloud_Seeding #NCM— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 24, 2021
#The_lowest_temperature recorded over the country today morning was 10.7°C in Raknah (Al Ain) at 06:30 UAE Local time.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 24, 2021