அபுதாபியின் ரக்னா பகுதியில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5:15 மணிக்கு, வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு நிலவரப்படி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை ஈரப்பதம் அதிகரிக்கும்.
#أقل_درجة_حرارة سجلت على الدولة صباح هذا اليوم 11 درجة مئوية في ركنة الساعة 05:15 بالتوقيت المحلي لدولة الإمارات.#The_lowest_temperature recorded over the country today morning was 11 °C in Raknah at 05:15 UAE Local Time.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) October 25, 2020
அதிகபட்ச வெப்பநிலை உள்பகுதிகளில் 34 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், கடற்கரை பகுதியில் 32 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், மலைகளில் 27 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடலோரம் மற்றும் உள் பகுதிகளில் இரவு மற்றும் நாளை காலை ஈரப்பதமாக இருக்கும். அதிகபட்ச ஈரப்பதம் கரையோரங்களில்70 முதல் 85 சதவீதம், உள்பகுதிகளில் 75 முதல் 90 சதவீதம் மற்றும் மலைகளில் 45 முதல் 65 சதவீதம் வரை இருக்கும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் மிதமாக இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.