UAE Tamil Web

“துபாய்க்கு உங்களை வரவேற்கிறேன்” – சுற்றுலா வந்த குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த துபாய் இளவரசர்..!

hamdan

சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரையில் துபாய் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் விருப்பத்திற்கு உரிய நகரமாக அறியப்படுகிறது. இதற்குக் காரணம் கொடுந்தொற்றுக் காலத்திலும் மேற்கொள்ளப்படும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பான உபசரிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது விஷயம் அதுவல்ல.

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரைப் பார்க்க, சீனாவில் இருந்து சுற்றுலா வந்த குடும்பம் ஒன்று முயற்சி செய்திருக்கிறது. இதனையறிந்த ஷேக் ஹம்தான், உடனடியாக அவர்களை சந்தித்திருக்கிறார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளவரசர், “துபாய்க்கு உங்களை வரவேற்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,” சீனாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா வந்திருந்த ஓர் அழகான குடும்பத்தை சந்தித்தேன். துபாய்க்கு உங்களை வரவேற்கிறேன். உங்களுடைய சுற்றுலா மகிழ்ச்சியாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap