அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமையை வழங்கும் விதமாக கோல்டன் விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.
அமீரக அரசின் விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகளில் இருப்பவர்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்படும்.
கோல்டன் விசா என்பது அந்நாட்டு குடியுரிமை பெற்று நீண்டக்காலம் அங்கு தங்கவும், படிக்கவும், பணிபுரியவும் வழிவகை செய்கிறது. மேலும் அந்நாட்டின் வியாபாரங்களின் 100 சதவீத உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
முதலீட்டாளர்கள் கோல்டன் விசா பெறுவதற்கு, ரூ. 48 லட்சம் முதலீடு செய்திருக்க வேண்டும்.
மாணவர்கள் கோல்டன் விசா பெறுவதற்கு, உயர்கல்வியில் குறைந்தபட்சம் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மற்ற விசாவை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாவை புதுப்பிக்க மருத்துவ உடற்தகுதிகளுக்கு சொந்தமாக செலவு செய்ய வேண்டும். ஆனால், கோல்டன் விசா வைத்திர்ப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதாலே செலவுகளை சேமிக்கலாம்.
கோல்டன் விசாதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளில் பெற்ற ஓட்டுநர் உரிமத்தை வைத்து துபாயில் எவ்வித ஓட்டுநர் தேர்வின்றி ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
மேலும் அபுதாபியில் உள்ள கார்கள் வாங்குவதற்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. SPA சேவைகள், உணவகங்கள், மருத்துவ காப்பீட்டிற்கு வருட சந்தாக்கான தொகைகளிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.