UAE Tamil Web

துபாய் EXPO 2020ல் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்!

உலகின் பிரமாண்ட கண்காட்சிகளில் ஒன்றான துபாய் Expo2020 அடுத்த மாதம் வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. 182 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து 25 மில்லியன் மக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கண்காட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ளது.

  • கண்காட்சி நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனரை கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.
  • கண்காட்சி வருவோர், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • அனைத்து இடங்களில் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை. போட்டுக்கொள்வது சிறப்பு. கண்காட்சியில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
  • துபாய் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும். முதலுதவி சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ் வசதிகளும் உண்டு.
  • முதலுதவி சிகிச்சை மையத்திற்கு தேவையான மருந்துகள் பாதுகாப்பான முறையில் சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும்.
  • காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி செய்யப்படும். பேருந்துகளில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
2 Shares
Share via
Copy link