துபாயில் வெள்ளிக்கிழமை இருந்த இலவச பார்க்கிங் வசதி தற்போது ஞாயிறாக மாற்றப்படுள்ளது.
கட்டண வாகன நிறுத்துமிடங்கள் முன்பு இருந்ததுபோல செயல்படும். ஆனால் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்கிங் செய்துக்கொள்ளலாம்.
துபாய் இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த தீர்மானத்தை வெளியிட்டார்.
புதிய பார்கிங் வசதிக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
துபாயில் கட்டண பார்க்கிங் நேரம் என்ன?
- ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணி நேரம் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
பல அடுக்குமாடி கட்டட பார்க்கிங் வசதிகளில் ?
- வாரத்தின் ஏழு நாட்களிலும் பார்க்கிங்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டண வசதியில் வாகனத்தை எத்தனை மணிநேரம் நிறுத்த முடியும் என்பதற்கான வரம்பு உள்ளதா?
- சாலையோர பார்க்கிங்கில் வாகனங்களை அதிகபட்சம் 4 மணிநேரம் தொடர்ந்து நிறுத்தலாம்.
- பொது பார்க்கிங்கில் அதிகபட்சமாக 24 மணிநேரம் நிறுத்தலாம்.
- பல அடுக்குமாடி பார்க்கிங்கில் அதிகபட்சமாக 30 நாட்கள் நிறுத்தலாம்.