UAE Tamil Web

அமீரக அதிபர் ஷேக் கலீஃபா உயிரிழந்ததற்காக காரணம் என்ன.?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் இன்று (மே.13) காலமானார் என்று எமிரேட்ஸ் செய்தி நிறுவனமான WAM வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

2014 இல் ஷேக் கலீஃபாவுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து பல ஆண்டுகளாக உடல் நலம் சரியின்றி இருந்தார். இதனால் நீண்ட காலமாக அன்றாட அரசு விவகாரங்களில் ஈடுபடுவதையும் நிறுத்தி இருந்தார். தற்போது அவரது இறப்புக்கு அமீரக தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap