UAE Tamil Web

அபுதாபி – துபாய் ரயிலியின் சிறப்பம்சம் என்ன..? விபரம் உள்ளே..!

அமீரக அரசால் அபுதாபியிலிருந்து துபாய் இடையே அமைக்கப்பட்டு வந்த எதிஹாட் ரயில் பாதை அமைக்கும் பணிய தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

எதிஹாட் ரயில் குறித்து அமீரக வாசிகளான நீங்கள், இங்கு தெரிந்து கொள்ளலாம்:

அபுதாபி மற்றும் துபாய் இடையே ரயில் பாதை எவ்வளவு நீளம்?

இந்த பாதை 256 கி.மீட்டர் நீளம் கொண்டது.

அபுதாபி – துபாய் இடையே ரயில் பயணிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

முன்னதாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பயணிகள் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களுக்குள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இது மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும், அபுதாபியிலிருந்து புஜைரா இடையே 100 நிமிடங்களில் பயணிக்க முடியும். 50 நிமிடத்தில் துபாயிலிருந்து புஜைரா மற்றும் அபுதாபியிலிருந்து அல் ருவைஸ் இடையே 70 நிமிடங்களில் பயணம் மேற்கொள்ளலாம்.

மற்ற ரயில்வே பாதைகள் எப்போது வரும்?

UAE அரசு ஊடக அலுவலகத்தின்படி, அமீரகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தேசிய ரயில்வே நெட்வொர்க்குடன் மற்ற எமிரேட்களை இணைக்கும் தயாரிப்பாக இந்த பாதை செயல்படுகிறது. அல் சிலா முதல் புஜைரா வரை நாட்டில் உள்ள 11 நகரங்களுக்கு ரயில்கள் இணைக்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு ரயிலில் 400 இருக்கை வசதிகள் உள்ளன. பயணிகளின் எண்ணிக்கை 2030-க்குள் ஆண்டுக்கு 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரக ரயில்வே துறை எவ்வளவு காலமாக செயல்படுகிறது?

இந்த ரயில்வே நெட்வொர்க்கின் முதல் நிலை 2016 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது எதிஹாட் ரயில் அமீரக தேசிய ரயில் நெட்வொர்க்கின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap