UAE Tamil Web

துபாய் ‘MUSEUM OF THE FUTURE’-இல் என்ன இருக்கிறது..? அது நிஜமாகவே அருங்காட்சியகம் தானா?

துபாயில் புதிதாக திறக்கப்பட்ட மியூசியம் ஆப் தி ஃபியூச்சரில் கூட்டம் அலை மோதி வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 22ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திறந்து வைத்தனர்.

இந்த அருங்காட்சியகத்திற்கு செல்பவர்கள் 2071ஆம் ஆண்டுக்கு பயணிப்பது போன்ற அனுபவத்தை வழங்குகின்றது.

சிறப்பான கட்டிட வடிவமைப்பு

7 அடுக்கு மாடி, தூண்கள் இல்லாத அமைப்பு என வித்தியாசமான கோணத்தில் அருங்காட்சியகம் அசத்துகிறது. மொத்தம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிடக் கலை ரீதியாக, அதன் வெளிப்புற அமைப்பில் கூர்மையான மூலைகள் இல்லாமல், 77 மீட்டர் உயரம் வரை உயர்ந்து நிற்கும் உலகின் மிகவும் அழகான கட்டிடங்களில் ஒன்றாகும்.

கட்டிடத்தின் முகப்பு துரு பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளி தோற்றம் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளன.

துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் குழு இந்த அருங்காட்சியகத்தை நிர்வகிக்கிறது. சோலார் பேனல்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உற்பத்தி செய்யப்படும் 4,000 மெகாவாட் மின்சாரம் அதன் தேவையை பூர்த்தி செய்கிறது.

இது நிஜமாகவே அருங்காட்சியகம் தானா?

அருங்காட்சியகம் என்பது வழக்கமாக வரலாறு, கலை அல்லது கலாசார ஆர்வமுள்ள பொருள்கள் காட்சிப்படுத்தப்படும் இடமாகவும் பாதுகாக்கப்படும் அல்லது ஆய்வு செய்யப்படும் இடமாகவும் இருக்கும்.

ஆனால், மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர் முன்னணி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மேலும் வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மியூசியத்தில் உள்ளடக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக டிக்கெட் பெறுவது எப்படி?

துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். பார்வையாளர்கள் 23-02-2022 இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap