அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் எலக்ட்ரானிக் டிராவில் 5,00,000 திர்ஹம் வெல்ல, சக்கர நாற்காலியில் இருந்த தனது நோய்வாய்ப்பட்ட நண்பருக்கு கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். 37 வயதான பினு பாலகுன்னேல் எலியாஸ் என்பவர் தனது நண்பரான ஷபீர் பணிச்சியில் (40) என்பவருக்கு அந்த வெற்றிச் சீட்டை (069002) வாங்கி கொடுத்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு எமிரேட்டில் உள்ள ஒரு சலூனில் ஷபீரை சந்தித்ததையும் அவர்களின் நட்பு எப்படி வளர்ந்தது என்பதையும் பினு இந்த அருமையான நேரத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டி பின்வருமாறு.
“நான் அபுதாபியில் முகமது பின் சயீத் நகரில் இரண்டு வருடங்களாக வசித்து வருகிறேன். ஒருமுறை நான் ஒரு சலூனுக்குச் சென்றபோது, ஷபீரை அங்கு சக்கர நாற்காலியில் சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, அவரைத் தாக்கிய சோகத்தை பற்றி நான் அறிந்தேன்.
ஷபீர் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வந்தார், ஆனால் ஒரு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட அதிர்ச்சி அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம் ரத்தக்கசிவுக்கு வழிவகுத்தது, மேலும் அவர் நான்கு மாதங்கள் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மீண்டு வந்துள்ளார், ”என்று பினு கூறினார். கடந்த ஆண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஷபீர் பல நிதி சிக்கல்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
இருப்பினும் அவர் Big Draw பெரிய டிக்கெட்டை வாங்குவதற்கும் தனது அதிர்ஷ்டத்தை அவ்வப்போது முயற்சிப்பதற்கும் பணத்தை செலவு செய்துள்ளார். பினுவுடன் பிணைப்பை ஏற்படுத்திய பிறகு, ஷபீர் தனக்காக அவரிடம் டிக்கெட் வாங்கச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது பினு வாங்கி கொடுத்த டிக்கெட்டில் தற்போது தனக்கு 5,00,000 திர்ஹம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஷபீர் தெரிவித்துள்ளார்.