நம்முடைய வாழ்க்கையின் பிணக்குகளையும் நெருக்கடிகளையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் நமக்கு, மாற்றுத் திறனாளிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து தெரிவதில்லை. எளிதில் நம்மால் செய்து முடிக்கக்கூடிய பணிகளுக்குக் கூட அவர்களுக்கு பிறரது உதவி தேவைப்படும்.
இந்த இடைவெளியை ஈடுகட்ட பல்வேறு சமூக அமைப்புகள் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்கும் விதமாக சக்கர நாற்காலிகளுடன் கூடிய சிறப்பு கேபினெட்களை அமைத்துள்ளது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).
துபாய் RTA வின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் இந்த சக்கர நாற்காலி வசதியுடன் அமைக்கப்பட்ட கேபினெட், மாற்றுத் திறனாளிகள் எளிதில் தங்களுக்கான சேவைகளைப் பெறும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
Our customer happiness centres are equipped with wheelchair cabinets to cater to the needs of #PeopleofDetermination. Your comfort is our priority. #RTA pic.twitter.com/qjD5Z3VffC
— RTA (@rta_dubai) August 2, 2021
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” உங்களுடைய வசதியை நாங்கள் முக்கியமாக கருதுகிறோம்” என RTA குறிப்பிட்டுள்ளது.
துபாய் RTA வின் இந்த திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.
