UAE Tamil Web

அமீரகத்தில் நோன்பு பெருநாள் எப்போது..? எவ்வளவு நாட்கள் விடுமுறை..?

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் மே 2 ஆம் தேதி வரும் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கமான EAS அறிவித்துள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வாலின் முதல் நாள் மே 2, 2022 திங்கட்கிழமை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக EAS வாரியத் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்தார்.

இஸ்லாமிய மாதங்கள் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து அனைத்து மாதமும் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். இந்த ஆண்டு, ரமலான் நோன்பு மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் (நோன்பு பெருநாளின்) முதல் நாளாக இருக்கும்.

அமீரக நாட்காட்டியின்படி, குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறைகள் ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை இருக்கும். ரமலான் 29 நாட்கள் நீடித்தால், குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். புனித மாதம் 30 நாட்கள் நீடித்தால், ஐந்து நாள் விடுமுறையாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த தினங்களில், குறிப்பிட்ட தினத்தில் பெருநாள் நோன்பு தொடங்க வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், பிறையைக் கண்டப்பின் தான் சரியான தேதியை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap