UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி இருக்கட்டும்.. அதேநேரம் இந்த தடுப்பூசியை போட்டுக்க மறந்துடாதீங்க – அமீரக சுகாதாரத்துறை வலியுறுத்தல்..!

Corona injection

அமீரகத்தில் குளிர்காலம் துவங்க இருப்பதை முன்னிட்டு பருவகால காய்ச்சல் தடுப்பூசியினை எடுத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார ஆணையம். இத்திட்டம் குறித்த அறிவிப்பு செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அமீரகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இந்த இன்ஃப்லூயன்சா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு இலவசம்?

அமீரக குடிமக்கள், நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்ட அமீரக குடியிருப்பாளர்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மற்றவர்களுக்கு தடுப்பூசிக்கு 50 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 – 3 வாரங்கள் கழித்து இந்த காய்ச்சல் தடுப்பூசியை மக்கள் எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 மாதக் குழந்தை முதல் அனைவரும் காய்ச்சல் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தடுப்பூசியினால் அலர்ஜி உண்டாகக்கூடியவர்கள் தங்களது மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona injection
1 Share
Share via
Copy link