UAE Tamil Web

வன விலங்குகளைக் கண்டால் உடனே இவர்களைத் தொடர்புகொள்ளவும் – துபாய் காவல்துறை வெளியிட்ட வீடியோ..!

tiger video

பொதுமக்கள் எவரேனும் வன விலங்குகளைக் கண்டால் அதனை அச்சுறுத்தவோ, அதற்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது என துபாய் காவல்துறை நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் தனித்துவிடப்பட்ட அல்லது சுற்றித்திரியும் வன விலங்குகளைக் கண்டால் அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுலாத்துறை (@MoCCaEUAE) அல்லது துபாய் நகராட்சி (@DMunicipality) அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும் என 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அமீரக சட்ட எண் 16, ஆர்டிக்கிள் 8 ல் குறிப்பிட்டுள்ளதாக துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் துபாய் சாலைகளில் சுற்றித் திரிந்த கரும்பூனை ஒன்றை, பொதுமக்கள் பலரும் கருஞ்சிருத்தை என நினைத்து, வதந்தியை கிளப்பி, பலரது தூக்கத்திற்கு வேட்டு வைத்தது நினைவிருக்கலாம்.

tiger video
0 Shares
Share via
Copy link