அமீரகத்தில் கோவிட்-19 நோய் குறைந்து வருவதால் விமான சேவைகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நோய்களின் போது பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதும் பயணக் காப்பீட்டை வைத்திருப்பதும் மிக அவசியமாக உள்ளது.
பயணிகளின் அமீரகம் வர விசா முக்கியமானதாகும். மேலும் பயணிகள் பயணக் காப்பீட்டுச் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும் என்று காப்பீட்டுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயணத்தின் போது ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால் காப்பீட்டின் மூலம் சலுகைகளை பெறலாம், இல்லாவிட்டால் அதற்காக தொகையினை நாம் வழங்க வேண்டியிருக்கும்.
கோவிட்-19 நோயால் தற்போது அதிகப்படியான பயணிகள் பயணக் காப்பீட்டுடன்தான் வெளிநாடு செல்கின்றனர். ஏனென்றால் கொரோனா பாதிப்பபு இலகுவாக வந்து செல்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனை மருத்துவ செலவுகள் இன்றி காப்பிட்டின் மூலம் தீர்வுப்படுத்திக் கொள்ளலாம் என்று ஓமன் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும், நுகர்வோர் வரிகளின் தலைவருமான ஜூலியன் ஆட்ரிரி.
இது குறித்து அல் வத்பா நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அனஸ் மிஸ்டரீஹி, கொரோனா தொற்றுநோய் துவங்கியதிலிருந்து, கோவிட்-19 முதல் பலவற்றை உள்ளடக்கும் வகையில் பேக்கேஜ்கள் மாற்றப்பட்டுள்ளதால் பயணக் காப்பீட்டிற்கான தேவை அதிகரித்து வருகிறது.
பயணிகள் பயணக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமானது. பாதுகாப்பான பயணங்கள் மற்றும் அவசர மருத்துவச் செலவுகள், விமானம் ரத்துசெய்தல், பொருட்கள் தாமதங்கள் மற்றும் பலவற்றிற்கான கவரேஜை உறுதிப்படுத்த பயணக் காப்பீடு முக்கியமானது என்றார்.
அல் சயேக் இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனத்தின் வணிக பொது மேலாளர் சஞ்சீவ் ஆனந்த், கொரோனா தொற்று நோய்க்குப் பிறகு பயணக் காப்பீட்டுகள் அதிகாமவிட்டதாக தெரிவித்தார்.
அமீரகத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விசாவுடன் பயணக் காப்பீடுகள் வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டில் தனிநபர்களின் மருத்துவ அறிவிப்புகள் போன்ற பல தரவுகள் அடிப்படையாகக் கொண்டது” என்று ஆனந்த் கூறினார்.