UAE Tamil Web

எப்படியெல்லாம் கண்டுபுடிக்கிறாய்ங்க.. Food Delivery App மூலம் வேறொரு பெண்ணுடன் இருந்த கணவரை பிடித்த மனைவி!

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 32 வயது இளைஞர் துபாயில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர் வேறொரு பெண்ணுடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து உணவு ஒன்றை ஆர்டர் செய்ய அது மனைவியின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வந்துள்ளது. ஓட்டலில் இருந்து கணவன் பெயரில் உணவு ஆர்டர் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த மனைவி, நேரடியாக சம்மந்தப்பட்ட ஓட்டலுக்கே சென்று அறையின் கதவை தட்ட, அங்கு தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை சரமாரியாக தாக்கினார். இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததால் அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Latest News | Hyderabad & Telangana| Breaking News | Business News |  Bollywood | Cricket | Videos | Photos

இதையடுத்து துபாய் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண், கணவர் தன்னை சரமாரியாக தாக்கிவிட்டதாக குற்றம்சாட்டி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து கணவர் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. தனது மனைவியை தாக்கவில்லை என்றும் அவரது உடலில் உள்ள காயங்கள் குதிரை சவாரியின் போது ஏற்கனவே ஏற்பட்டது என்றும் கணவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஓட்டலில் இருந்த பெண் தனது தோழிதான் என்றும் மனைவி நினைப்பதை போன்று வேறு எந்த தொடர்பும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனைவி தொடர்ந்த வழக்கை துபாய் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 Share
Share via
Copy link