கணவனின் அதீத காதல் ; வாழ்க்கையில் “சுவாரஸ்யம் இல்லை, சண்டை இல்லை” என்று கூறி மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சி சம்பவம்!

Wife in UAE seeks divorce because husband loves her a lot, doesn't argue with her

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், அதற்கான காரணம்தான் மூச்சடைக்கச் செய்கிறது. தனது கணவர் மிக அதீத காதலைப் பொழிகிறார். அதனால், என் வாழ்க்கை நரகமாகி விட்டது. எனவே, எனக்கு விவாகரத்துக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.

அந்த பெண் புஜைராவில் உள்ள ஒரு ஷரியா நீதிமன்றத்தில், திருமணமான ஓராண்டுக்குப் பிறகு தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறினார், கணவர் தன் மீது மிகுந்த அன்பு செலுத்துவதால் அவரை வெறுக்கத் தொடங்கிவிட்டேன் என்று ’கலீஜ் டைம்ஸில்’ வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டது.

அவரது தீவிர அன்பு மற்றும் காதலால் நான் செயலிழந்து விட்டேன். எனக்கு வீட்டைச் சுத்தம் செய்ய அவர் எனக்கு உதவுகிறார். சமையலில் உதவியாக இருப்பார். என்னை உள்ளங்கையில் தாங்கினார். அவரது கருணை எனது வாழ்க்கையை “நரகமாக” மாற்றியது, திருமண மோதல் நீண்ட காலமாகியும் ஏற்படவில்லை’ அவர் கூறினார்.

அடிப்பதில்லை, திட்டுவதில்லை. திகட்டத் திகட்டக் காதலிக்கிறார், பரிசுகளாக வாங்கிக் குவிக்கிறார், எனவே வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை.

மேலும், “நான் ஒவ்வொரு நாளும் தகராறுக்காக ஏங்குகிறேன். ஆனால், அவரோ என்னிடம் சண்டை போடாமல், பரிசுகளாக வாங்கித் தருகிறார். எனக்கு சிறு சிறு மோதல்கள், முரண்பாடுகள் தேவை. எந்தவித தொந்தரவும் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு திகட்டுகிறது. நரகமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.

அவரின் மனைவி ஒரு முறை எடையைப் பற்றி புகார் செய்துள்ளார். உடனே அவர் ஸ்ட்ரிக்ட் டையட்டில் இருந்து பழைய வடிவம் பெற கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார். இதனால் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கை வாபஸ் பெறுமாறு, மனைவிக்கு அறிவுறுத்துமாறு கணவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

”முதல் ஆண்டிலேயே திருமண பந்தத்தை முறிப்பது நியாயமில்லை. எல்லோரும் தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்,” என்று அவரது கணவர் நீதிபதியிடம் மன்றாடிய பின்னர் இருவருக்கும் இடையில் சமரசம் செய்ய முயல்கின்றனர்.

தம்பதியினருக்கு நல்லிணக்கத்திற்கு வாய்ப்பு அளிக்க வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Loading...