UAE Tamil Web

“வில் மாமாவின் பரிசு” – துபாய் இளவரசரின் இரட்டைக் குழந்தைகளுக்கு வித்தியாசமான பரிசுகளை அனுப்பிவைத்த ஹாலிவுட் பிரபலம் வில் ஸ்மித்..!

will smith

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு கடந்த வாரம் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அக்குழந்தைகளுக்கு ஹாலிவுட் நட்சத்திரமான வில் ஸ்மித் பரிசுப் பொருட்களை அனுப்பியிருக்கிறார். “இளவரசன் ரஷீத்” மற்றும் “இளவரசி ஷேக்கா” என எழுதப்பட்ட இரண்டு டி-ஷர்ட்களை பிங்க் மற்றும் நீல வண்ண பலூன்களை அனுப்பியிருக்கிறார் வில் ஸ்மித். பரிசுப் பொருளின் மீது “அங்கிள் வில் (Uncle Will)” என்றும் அவர் எழுதியிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான அலாதின் படத்தினைத் தழுவி சில புகைப்படங்களும் அந்த பரிசில் இடம்பெற்றுள்ளன.

will smith
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap