UAE Tamil Web

ரமலான் 2022: அமீரக மசூதிகளில் தராவிஹ் தொழுகை நடைபெறுமா..? முழு விபரம் உள்ளே..!

அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 துவங்க இருக்கும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இது 3வது ரமலான் ஆகும். இருப்பினும் முந்தைய இரண்டு ஆண்டுகளை விட இந்த ரமலானில் பல கட்டுப்படுகளை அரசு நீக்கியுள்ளது.

அமீரகம் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசு நீக்கி பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறது.

அமீரகத்தில்  தராவிஹ் தொழுகை குறித்து தெரிந்துக்கொள்ளலாம்:
மசூதிகளில் தராவீஹ் தொழுகை நடைபெறுமா?

தராவீஹ் என்பது புனித ரமலான் மாதத்தில் மசூதிகள் முழுவதும் நடத்தப்படும் மாலை நேரத் தொழுகையாகும். 2020 ஆம் ஆண்டில், கோவிட் பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் வீட்டில் தொழுகை நடத்தினர். 2021 ஆம் ஆண்டில், கடுமையான விதிகளுடன் மசூதிகளில் ஒரு கூட்டத் தொழுகையாக சமூக இடைவெளியுடன் தராவீஹ் தொழுகை நடைபெற்றது.

இந்த ஆண்டு தொழுகைக்கான வழிகாட்டுதல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், மசூதிகளில் தாராவீஹ் வழக்கம்போல இயல்பான முறையில் நடைபெறும் என்ற்யு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா?

அமீரகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் முழுவதும் தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பிப்ரவரியில், NCEMA கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. அதன் படி வழிபாட்டாளர்கள் தொழுகையின் போது முகமூடி அணிந்து, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap