UAE Tamil Web

அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசாக்கள் இந்தியர்களுக்கு உதவுமா? அதன் பயன்கள் என்ன?

அமீரகத்திற்கு வருகைத்தர பல்வேறு வகையான விசா வகைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய விசா திட்டங்களுக்கு ஸ்பான்சர்கள் தேவையில்லை என்றும் இந்த நடைமுறைகள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதனால் அமீரகத்திற்கு வேலை தேடி வரும் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியிலும் முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமீரகத்தில் சுமார் 80 சதவீத மக்கள் வெளிநாட்டினராக இருக்கும் நிலையில், இப்புதுவகை விசாக்கள் மூலம் வரவேற்பு அதிகரிக்கும். கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டு மக்களால், அதிலும் இந்திய மக்களால் பொருளாதாரத்திலும் வர்த்தகததிலும் அமீரகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இப்புதிய விசா நடைமுறைகளால் இந்தியர்களுக்கு என்ன பயன்?

வேலை விசா (WORK VISA):

அமீரகத்தில் வேலை தேட வருகைத்தரும் இளம் தலைமுறையினர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின்படி, உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் படித்து முடித்த புதிய பட்டதாரிகளுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி நிலை இளங்கலை பட்டம் ஆகும்.

TOURIST விசா

அமீரகத்தில் உள்ள சுற்றுலா துறைகள் வழங்கப்படும் வழக்கமான சுற்றுலா விசாவிற்கு கூடுதலாக, 5 ஆண்டுகளுக்கு பல நுழைவு சுற்றுலா விசா (MULTI VISA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டூரிஸ்ட் விசா நடைமுறைக்கு ஸ்பான்சர்கள் தேவையில்லை. இந்த விசாவில் வருபவர்கள் 90 நாட்கள் தொடர்ந்து அமீரகத்தில் தங்கலாம். மேலும் இந்த விசாவை ஒரு வருடத்திற்கு 180 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்த விசாவிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன், கடந்த ஆறு மாதங்களில் $4,000 வங்கி இருப்பு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு தொகைகள் இருப்பதற்கான ஆதார சான்று வேண்டும்.

குடியிருப்பு விசா:

திறமையான வல்லுநர்கள், FREELANCER, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஈர்க்க 5 வருட (RESIDENCE) குடியிருப்பு விசா வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க நுழைவதற்கான அனுமதி (Entry permit to visit relatives or friends):

அமீரகத்தில் வசிக்கும் உங்களது உறவினர்களையோ, நண்பர்களையோ காண விசா பெற்றுக்கொண்டு வரலாம். இந்த விசாவுக்கு ஸ்பான்சர் தேவையில்லை.

தற்காலிக பணி விசா (TEMPORARY WORK)

அமீரகத்திற்கு தற்காலிகமாக பணிபுரிய வருகைத்தருவோருக்காக இப்புதிய விசா கொண்டுவரப்பட்டுள்ளது. தற்காலிக பணி என்பதால் இந்த விசா முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இந்த விசாவுக்கு தற்காலிக பணி ஒப்பந்தம் அல்லது முதலாளியிடமிருந்து வருகை குறித்த தெளிவான கடிதம் மற்றும் வேலை செய்வதற்கான சுகாதாரத் தகுதிக்கான சான்றிதைழ் அவசியமாகும்.

கோல்டன் விசா:

அமீரகத்தில் கோல்டன் விசா பெறுவதற்காக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள், தரங்கள் தளர்த்தப்பட்டு, இன்னும் பல துறைகளில் உள்ள சாதனையாளர்களை புதிதாக இணைக்கப்பட்டுளன.

10 ஆண்டு குடியிருப்பு கோல்டன் விசா:

முதலீட்டாளர்கள், தொழிலளதிபர்கள், திறமையாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதாபிமான முன்னோடிகள் மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் என முக்கிய அந்தஸ்தில் உள்ள சாதனையாளர்களுக்கு 10 ஆண்டு குடியிருப்பு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

மேலும் கோல்டன் விசா பெற்றவர்கள் அமீரகத்திற்கு வெளியே தங்குவதற்கான அதிகபட்ச காலம் தொடர்பான எந்தத் தடையும் இதுவரை தெரிவிகப்படவில்லை.

கிரீன் விசா:

FREELANCER அல்லது சொந்த தொழில் செய்ய விரும்புவோர் இனி அமீரகத்தில் ஸ்பான்சர் மற்றும் நிறுவனத்தின் துணையில்லாமல் 5 வருடம் தங்குவதற்குக் கிரீன் விசா வழங்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap