UAE Tamil Web

ஒமைக்ரான் வைரஸ் : இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்துத் தடையா?

REPATRIATION-FLIGHT

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமைக்ரான் அதிவேகமாக பரவிவருகிறது. உலக சுகாதார மையம் வெளியிட்ட அடிக்கையின்படி 23 நாடுகளுக்கு இதுவரையில் இந்தப் புதிய வைரஸ் பரவியிருக்கிறது.

கடந்த புதன் கிழமை அமீரகத்தில் முதல் கொரோனா ஒமைக்ரான் வைரஸ் தாக்குதல் பதிவாகியிருகியிருப்பதாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமீரக வழியாகப் பயணித்த அந்நபர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்ததாக அரசு தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்துத் தடையா?

ஒமைக்ரான் கொரோனா காரணமாக இந்தியா – அமீரகம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்துத்தடை விதிக்கப்பட இருப்பதாக வாட்சாப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. ஆனால், அமீரக விமானப் போக்குவரத்து அமைச்சகமோ, அமீரக அரசோ இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

ஆகவே, பொதுமக்கள் வாட்சாப்பில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கண்டு குழம்ப வேண்டாம் என UAE Tamil Web கேட்டுக்கொள்கிறது.

எந்த நாடுகளுக்குத் தடை?

குறிப்பிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகளில் இருந்து நேரடியாக துபாய்க்கு வரவோ அல்லது அந்நாடுகள் வழியாக துபாயை அடையவோ இடைக்காலத் தடை விதிப்பதாக துபாய் கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 29 ஆம் தேதிமுதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் எனவும் மறுஅறிவிப்பு வரும் வரையில் இந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடை விதிக்கப்பட்ட நாடுகள்

  1. போட்ஸ்வானா
  2. ஈஸ்வாதினி
  3. லெசோதோ
  4. மொசாம்பிக்
  5. நமீபியா
  6. தென்னாப்பிரிக்கா
  7. ஜிம்பாப்வே

அதே நேரத்தில் அமீரகத்திலிருந்து மேற்கண்ட நாடுகளுக்குச் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் கட்டுப்பாட்டு மையம் விளக்கியுள்ளது.

ஒமைக்ரான் பரவல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமீரக சுகாதராத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். ஃபரிதா அல் ஹோசாணி,” உலக சுகாதார மையம் கூறியுள்ளபடி  உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வல்லுனர்கள் குழு ஆராய்ந்து வருகிறது. முந்தைய கொரோனா திரிபுகளை விட இந்த வகை வேகமாக பரவக் கூடியது. இருப்பினும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். மேலும் பொதுமக்கள் சூழலின் தன்மையை அறிந்து எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

REPATRIATION-FLIGHT
15 Shares
Share via
Copy link