ஓமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக அமீரகத்தில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா நோயை விட ஓமிக்ரான் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறை காரணமாக அமீரகத்தில் ஊரடங்கு அமல்படுத்தவில்லை. மீண்டும் மாறுபாடுகளுடன் தொற்று ஏற்பட்டால், முழுவதுமாக ஊரடங்ககு அமல்படுத்தப் போவதில்லை” என்று வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி அல் சியோடி கூறினார்.
“2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய் ஏற்பட்டபோது அமீரகம் முழுவதும் ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் முதல் நாடாக ஊரடங்கை நீக்கியது. இதனால் 2021இல் உலக மக்களை Expo 2020-க்கு வரவேற்க முடிந்தது. ஊரடங்கை நடைமுறைக்கு கொண்டு வர முடியாது என்பதை உலகிற்குக் வெளிகாட்டினோம். அனைவரும் ஆரோக்கியத்துடனும், பொருளாதாரத்தில் உறுதியான நிலைப்பட்டிலும் செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு மீண்டு வர வேண்டும். தொற்றுநோய் போன்ற உலகளாவிய சவால்களை நம்மால் சமாளிக்க முடியும்” என்று அல் சியோடி தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “அமீரகத்தில் தினசரி அடிப்படையில் கோவிட்-19 சோதனைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வந்துள்ளனர்” என்றார்.