UAE Tamil Web

துபாயை நச்சுன்னு போட்டோ எடுங்க, 10 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசு வெல்லுங்க – RTA வின் அட்டகாசமான அறிவிப்பு..!

photo

போட்டா எடுப்பதில் பிஸ்தாவா நீங்கள்? அப்படியானால் 10,000 திர்ஹம்ஸ் பரிசை தட்டித்தூக்க பொன்னான வாய்ப்பு ஒன்றினை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உங்களுக்கு வழங்குகிறது.

துபாய் பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தப் போட்டியை RTA முன்னெடுத்துள்ளது. ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சர்வதேச புகைப்பட விருதுடன் (HIPA) இணைந்து இந்த போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஹிபாவின் பொதுச் செயலாளர் அலி கலீபா பின் தலித்,” புகைப்பட ஆர்வலர்களை இதில் கலந்துகொள்ள அழைக்கிறோம். மூன்று கருப்பொருள்களின் அடிப்படையில் கலைஞர்கள் தங்களது புகைப்படங்களை அனுப்பலாம். அவை கலை மற்றும் கட்டிடக்கலை, பொதுப்போக்குவரத்து, ஏமிராட்டி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை” எனத் தெரிவித்துள்ளார்.

கலை மற்றும் கட்டிடக்கலை

துபாயின் அழகிய கட்டிடங்கள், உட்கட்டமைப்பு, தெருக்கள் ஆகியவற்றை நீங்கள் புகைப்படம் எடுக்கவேண்டும்.

பொதுப்போக்குவரத்து

துபாயின் மெட்ரோ, டிராம், ஃபெர்ரி, ஆப்ரா, டாக்சிகள் மற்றும் பேருந்துகளை அழகாக புகைப்படம் எடுக்கவேண்டும்.

ஏமிராட்டி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை

அமீரக பாரம்பாரிய இடங்கள், நிகழ்ச்சிகள், அமீரக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உங்களுடைய புகைப்படம் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள்

  • ஜூன் 27 ஆம் தேதி துவங்கி மூன்று வாரங்கள் இந்த போட்டி நடைபெறும். இதில் அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் உட்பட அனைவரும் கலந்துகொள்ளலாம்.
  • போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருப்பொருளுக்கு ஒன்று என மொத்தம் 3 புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
  • நீங்கள் எடுத்த புகைப்படங்களை ஹிபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.hipa.ae ல் சமர்ப்பிக்கவேண்டும்.

பரிசுகள்

  • போட்டியில் வெற்றிபெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வெற்றியாளர்களுக்கு முறையே 10,000, 7,000 மற்றும் 3000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
  • தகுதிவாய்ந்த 25 பேருக்கு தலா 1000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நோல் கார்டுகள் (Nol Cards) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற வாழ்த்துக்கள்.

photo
0 Shares
Share via
Copy link