UAE Tamil Web

“கொஞ்சம் தள்ளியே வாங்க.. என் அம்மா ஊர்ல எனக்காக காத்திருக்காங்க” – வைரலாகும் டெலிவரி டிரைவரின் வசனம்..!

noon

அமீரகத்தின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான நூன் -ல் பணிபுரியும் டிரைவர் ஒருவர் தனது டெலிவரி பாக்ஸில் ஒட்டியுள்ள அறிவிப்பு அனைவரையும் சற்றே சிரிக்க வைத்தாலும் மறக்காமல் சிந்திக்கவும் தூண்டுகிறது.

சிக்னலில் நின்றுகொண்டிருந்த அவரை பின்னால் காரில் இருந்தவர் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த டிரைவர் தனது டெலிவரி பாக்ஸின் பின்புறத்தில்” தயவு செய்து இடைவெளி விட்டு வாருங்கள். என்னுடைய அம்மா, பாகிஸ்தானில் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறார் எனப் பொருள்படும் வகையில் Please Keep Distance. My Mom is waiting in Pakistan” என எழுதியுள்ளார்.

இது சக வாகனவோட்டிகள் பலரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

 

noon
10 Shares
Share via
Copy link