21.7 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

விரைவில் சேவையை துவக்க தயாராகும் புதிய தேசிய விமான நிறுவனமான “விஸ் ஏர் அபுதாபி”(Wizz Air Abu Dhabi)

wizz

அமீரகத்தின் புதிய தேசிய விமான நிறுவனமான விஸ் ஏர் அபுதாபி(Wizz Air Abu Dhabi) தனது ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழை (air operator certificate), அமீரக பொது சிவில் விமான ஆணையத்திடமிருந்து (GCAA) அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.

ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழைப் பெறுவது என்பது விமான சேவையைத் தொடங்குவதற்கான ஒழுங்குமுறை செயல்முறைகளின் கடைசி கட்டத்தை நிறைவு செய்துள்ளதை குறிக்கிறது. இதன் மூலம் விஸ் ஏர் அபுதாபி விமான சேவைகளை வழங்க தேவையான அனைத்திற்கும் இணங்குகிறது. பாதுகாப்பான மற்றும் திறமையான செயல்பாட்டை அளிக்க முழு திறனையும் பெற்றுள்ளது எனபதை GCAA உறுதிப்படுத்தியுள்ளது.

தொற்று நேரத்திலும் GCAA மற்றும் விஸ் ஏர் அபுதாபி பிரதிநிதிகள், ஆப்ரேட்டர் சான்றிதழைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தனர். அதன் பலனாக கோவிட் -19 காரணமாக விமானத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடி ஏற்பட்ட சூழலில், 8 மாத காலகட்டத்தில் விஸ் ஏர் அபுதாபியின், ஏர் ஆபரேட்டர் சான்றிதழ் செயல்முறைகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது சந்தையில் கிடைக்க கூடிய மிக நவீன விமானமான ஏர்பஸ் ஏ 321 நியோ மூலம், விஸ் ஏர் அதன் செயல்பாட்டு திறன்களை ஜி.சி.ஏ.ஏ க்கு நிரூபித்தது. எரிபொருள் திறனை அதிகம் கொண்ட P&W GTF என்ஜின்களைக் கொண்ட இந்த விமான வகை மத்திய கிழக்கில் தான் முதலில் உள்ளன.

“அமீரகத்தின் தேசிய விமானமாக விஸ் ஏர் அபுதாபியை சேர்ப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு விஸ் ஏர் மற்றும் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என GCAA -ன் டைரக்டர் ஜெனரல் சைஃப் முகமது அல் சுவைதி கூறியுள்ளார்.

ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழ் பெற்றுள்ளது எங்களுக்கு மிக முக்கிய மைல்கல். ஏனெனில் இப்போது விமானத்தை இயக்குவதற்கான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் பெற்றுள்ளோம். நாங்கள் ஒரு பாதுகாப்பான விமான சேவைகளை வழங்க முழு திறன் கொண்டவர்கள் என்பதை GCAA க்கு தெளிவாக நிரூபித்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணங்களில்(ultra-low fares) சேவைகளை வழங்குவோம். இந்த புதிய விமான நிறுவனம் , அபுதாபி விமான நிலையத்திற்கும் அபுதாபிக்கும் நிறைய மதிப்பை கொடுக்கும் என்று விஸ் ஏர் அபுதாபியின் நிர்வாக இயக்குனர் கீஸ் வான் ஷைக் கூறியுள்ளார்.



error: Alert: Content is protected !!