அமீரகத்தில் கொரோனா பயணக் கட்டுபாடு தளார்த்தப்பட்டுள்ள நிலையில், துபாய் இந்தியா இடையே அதிக விமானங்களை அறிமுகப்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, இந்தியாவிற்கு வாரத்திற்கு 170 விமானங்களை ஃபிளை எமிரேட்ஸ் விமான நிறுவனம் இயக்கி வருகிறது.
துபாய் ஏர்லைன்ஸின் தலைமை வணிக அதிகாரி அதுனான் காசிம், இந்தியா துபாய் இடையே அதிக விமானங்களை இயக்குவதற்கான இருப்பதாக தெரிவித்தார்.
இந்த வழித்தடங்களில் கோடைக் காலத்திற்கு முன்னதாக தேவை அதிகரித்து வருவதால், பட்ஜெட் கேரியர் விமானங்களான Wizz Air Abu Dhabi போன்ற புதிதாக தொடங்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கு சேவைகளைத் தொடங்க உள்ளன.
இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ரூபிந்தர் ப்ரார் கூறுகையில், கோவிட் தொற்றுக்குப் பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.