அமீரக பெண் காவலரை தாக்கிய யாசகம் எடுக்கும் பெண் கைது!

woman beggar jailed for assaulting UAE cop

அஜ்மானில் உள்ள ஒரு தெருவில் யாசகம் எடுத்து கொண்டிருந்த 54 வயது அரபு பெண், தன்னை கண்ட பெண் போலீஸ் அதிகாரியைத் தாக்கிய குற்றத்திற்காக நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அப்பெண் தன்னிடம் ஐடி இல்லை என்று வலியுறுத்தி கூறியுள்ளார், மேலும் காவலருடன் ஒத்துழைக்க மறுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அதிகாரியைத் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் அவரது உடலின் வெவ்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அப்பகுதியில் ரோந்து வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

அதன் பிறகு நடைபெற்ற நீதிமன்ற விசாரனையின் போது, ​​அந்த பெண் தன் மீது சுமத்தப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டை மறுத்தார், ஆனால் மருத்துவ அறிக்கை தாக்கப்பட்ட பெண் அதிகாரியின் வாதத்தை ஆதரிப்பதாக அமைந்தது.

இதனை அடுத்து, அஜ்மான் குற்றவியல் நீதிமன்றம், அந்த பெண் குற்றவாளி என கண்டறிந்து சிறைத்தண்டனை வழங்கியது. மேலும், தண்டனை முடிந்ததும் நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

Source : Khaleej Times

Loading...