துபாயில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் யார் என்று சரியான அடையாளம் தெரியாததால் பொதுமக்களின் உதவியை அமீரகம் காவல்துறை நாடியுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், பர் துபாயில் நடந்த கார் விபத்தில் சிக்கி பலியானார்.
இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், காணாமல் போனதாக புகாரும் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
“உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண, துறைமுக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கலாம் அல்லது காவல்துறை அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் 04-901 என்று காவல்துறை கூறியுள்ளது.