UAE Tamil Web

நான் காப்பி குடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அந்த சப்தம் கேட்டது – துபாயில் மாடியிலிருந்து குதித்த இளம்பெண்..!

Dubai JLT

துபாய்: ஜூமெய்ரா லேக்ஸ் டவர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

அவருடைய கூற்றுப்படி, G – கிளஸ்டரில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அதே கட்டிடத்தில் பணிபுரியும் சாட்சியாளர், மதிய உணவுக்காக அருகில் இருந்த காப்பி ஷாப்பில் நின்றிருந்த வேளையில் “தட்” என்று சப்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் கீழே விழுந்த இளம்பெண்ணை நோக்கி விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

“நான் காப்பி ஷாப்பை விட்டு வெளியே வருகையில் திடுக்கிட்டு நின்றேன். சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் உதவிக்காக அலறினார்கள்” என சம்பவத்தை பார்த்தவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததுமே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த துபாய் காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதுகுறித்த மேற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.