தமிழகத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். அவரது மகள் கவிதா நெல்லையைச் சேர்ந்த இம்ரான் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இது குறித்த வழக்கு விசாரணையில், “தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய இம்ரான், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முற்படுவதாக கவிதா தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நண்பர்களான இவர்களுக்கிடையில் காதலாக மாறியுள்ளது, இம்ரான் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து அருண்குமார் என்று கூறி கவிதாவிடம் பழகியுள்ளார்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், அருண்குமார் என்ற பெயரில் பழகிய அருண்குமாரின் உண்மையான பெயர் இம்ரான் என்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெயரையும் தருண் என மாற்றிக் கொண்டார்.
இதனையடுத்து கடந்த 30.10 2019 அன்று தூத்துக்குடியில் இம்ரானை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதால் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.பின்னர் திருமணத்துக்கு பிறகு அவருடன் நானும் துபாய் சென்று விட்டேன்.
நான் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளேன். இதுகுறித்து கேட்டபோது பணத்திற்காக தான் ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அவர் கைது செய்யப்படாததால் கவிதா நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.