கன மழையினால் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி.!

RAK rain- woman dead

கடந்த இரண்டு நாட்களாக ராஸ் அல் கைமாவில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள பல வீடுகள் சேதமடைத்துள்ளன. அந்த பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றான, அல் ஃபஹ்லீம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த ஆப்பிரிக்க பெண் ஒருவர் மீது, அந்த வீட்டு சுவர் விழுந்ததில் அவர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

RAK காவல்துறையின் பொதுத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுவைமி கடந்த சனிக்கிழமை (January 11 2020) கூறுகையில்,”அல் ஃபஹ்லீன் பகுதியில் உள்ள வீடுகள் பெரும்பாலும் அருகிலிருக்கும் வெள்ளநீர் நிறைந்த பள்ளத்தாக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல் ஃபஹ்லீன் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

“இதுமட்டுமின்றி வாடி ஷாமில் (Wadi Shaam) ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு ஆசிய தொழிலாளி காணாமல் போயுள்ளார். அவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த மீட்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட குழுக்கள், எந்நேரத்திலும் எந்தவித மீட்டுப்புப்பணி செய்யவும் தயாராக உள்ளனர்.” என்றார்.

மேலும் அவர் ,”RAK முழுவதும் 87 ரோந்துப் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரோந்துகளை மேற்கொள்ளும் காவலர்கள் RAK-வின் அனைத்து சாலைகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, கடந்த இரண்டு நாட்களாக வானிலை நிலைமை குறித்து அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் 16 எச்சரிக்கை அலாரங்களை RAK போலீசார் பொதுமக்களுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த எச்சரிக்கைகள் யாவும் RAK போலீஸ் சமூக ஊடக கணக்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.” என்று கூறினார்.

கன மழையின் காரணமாக மக்களின் பாதுகாப்பை கருதி RAK காவல்துறை சில சாலைகளை தடுத்துள்ளனர். அவை,

  • அல் ஷுஹாதா (தியாகிகள்) சாலை (Al Shuhada (Martyrs) road)
  • ஜெபல் ஜெய்ஸுக்கு செல்லும் சாலைகள் (roads to Jebel Jais)
  • சக்ர் பூங்காவிற்கு அருகிலுள்ள அல் கரண் பாலம் (Al Kharan Bridge close to Saqr Park)
  • அல் ஃபிலாயா குடியிருப்பு (Al Filaya residential area) பகுதிக்கு செல்லும் சாலைகள்
  • அல் ஃபஹ்லீன் பகுதியின் வாடி நக்ப் (Wadi Naqb at Al Fahleen)
  • பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து ஜெபல் அஸான் (அமீம்) பள்ளத்தாக்கு (Jebel Azan (Ameem) valley) செல்லும் சாலைகளும் தடுக்கப்பட்டுள்ளன.

 

Loading...