UAE Tamil Web

அமீரகத்தில் பணி அழுத்தத்தால் கருவை இழந்த பெண்.. நிறுவனத்திடம் 1 மில்லியன் திர்ஹம்ஸ் கோரி வழக்கு..!

அமீரகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு கூடுதல் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக கருவை இழந்துவிட்டதால் 1 மில்லியன் திர்ஹம்ஸ் இழப்பீடு கோரி நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு கொடுத்துள்ளார்.

தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கு 180,000 திர்ஹம்ஸ் விடுப்புத் தொகையாகவும், 694,000 திர்ஹம்ஸ் ஊக்கத் தொகையாகவும், 510,000 திர்ஹம்ஸ் நிலக் கமிஷன் தொகையாகவும் மற்றும் 9 வருட வாடகைக் கமிஷனாக 500,000 திர்ஹம்ஸ் குத்தகைத் தொகை என வருடத்திற்கு தர வேண்டும் என்று அப்பெண் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர் சட்ட வழக்கின்படி, அப்பெண் தான் முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறி, தனது வேலையில் தொடந்துள்ளார். அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், மாதச் சம்பளமாக 77,000 திர்ஹம்ஸ் பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்பட்டு கரு கலைந்துவிட்டதாக நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனம் ஓய்வு குறித்து விசாரிக்க அழைத்தபோது, அந்த பெண் விசாரணையை ஒத்திவைக்கமாறு கோரிக்கை வைத்திருந்தார். அதற்கான ஆவணங்களை நீதிமன்றாத்தில் சமர்ப்பித்தார். ஆனால் நிறுவனம் அவரது கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், அபுதாபி நீதிமன்றம் 324,000 திர்ஹம்ஸ் வழங்கப்படாத ஊதியம் மற்றும் 20 ஆண்டுகள் பணிபுரிந்ததற்காக தொகையினையும் அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று அந்த நிறூவனத்திற்கு உத்தரவிட்டது. மேலும் அப்பெண்ணின் மற்ற கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap