UAE Tamil Web

“அது பிரேக் இல்லையா” : காரில் பிரேக் என நினைத்து ஆக்ஸிலேட்டரை அழுத்திய பெண் – கண்டமான கடை..!

car

ஷார்ஜாவில் மேய்ஸ்லூன் பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார் ஒரு பெண்மணி. பிரேக் என நினைத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபித் ஆட்டோமோட்டிவ் சொல்யூஷனில் விபத்து மற்றும் RSA பிரிவு மேலாளர் அப்துல்ரகுமான் அல் ஷம்ஷி இதுகுறித்துப் பேசுகையில்,”பாகிஸ்தானைச் சேர்ந்த 42 வயது பெண்மணி பதட்டம் காரணமாக இந்த விபத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் கடையின் முகப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி முழுவதுமாக சேதமடைந்தது” என்றார்.

இதற்கிடையே வாகனவோட்டிகள், பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தவேண்டாம் என ஷார்ஜா காவல்துறை எச்சரித்துள்ளது. கவனக் குறைவுடன் வாகனத்தினை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக 2020 ஆம் ஆண்டில் ஷார்ஜா காவல்துறை 10,882 அபராதங்களை விதித்ததாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகள் 9,872 ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் சொல்வது என்ன?

புதிய போக்குவரத்து சட்டத்தின் 23 வது பிரிவு, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் 800 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.

கவனக்குறைவாக வாகனத்தினை இயக்கி திடீரென வேறு லேன்களுக்கு மாறுவது பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகள், செல்லப்பிராணிகள், வானொலி ஆகியவை கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களில் பேசிய அல்லது குறுஞ்செய்தி அனுப்பியதற்காக 9,872 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

car
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap