UAE Tamil Web

பஹ்ரைனில் இந்திய உணவகத்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு.. அமீரக இளவரசி கடும் கண்டனம்..!

பஹ்ரைன் நாட்டில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்திற்கு அமீரக இளவரசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வாசலிலேயே நிற்க வைத்த கொடுமை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய மாணவிகளுக்கு அச்சுறுத்துத்தல் ஏர்படுத்தும் வகையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களால் பதற்றமான சூழல் உருவானது.

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்தது போலவே அரபு நாடான, பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த இந்திய உணவகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர்.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அடிலியா பகுதியில் லாண்டர்ன்ஸ் எனும் உணகத்திற்கு ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணை அங்கிருந்த மேலாளர் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளார். இதனை அடுத்து அப்பெண் பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம், சுற்றுலா மற்றும் நிறுவனங்கள் தொடர்பான 1986ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டம் 15இன் படி உணவகத்தை மூடி சீல் வைத்தது.

இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக செய்லபட்ட இந்திய உணவகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமீரக இளவரசி தனது டிவிட்டர் பக்கத்தில், “இஸ்லாமிய நாட்டில் இனவெறி வரவேற்படமாட்டாது” என்றும் ஹேஷ்டேங் #Islamophobia என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இவர், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படும் அவலங்கள் குறித்த கண்டனங்களையும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap