பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான கால்லப்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சட்டம் மற்றும் ஒழுங்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பங்குபெற்ற அமீரக குடியிருப்பாளர்களில் 95% பேர் நள்ளிரவிலும் தங்களால் அமீரக தெருக்களில் பயமின்றி நடந்து செல்ல முடியும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து, அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,”குடியிருப்பாளர்கள் இரவில் பாதுகாப்பாக தனியாக நடந்து செல்லலாம். பாதுகாப்பு என்பது ஒரு ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பு என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை. ஒரு பெண் தனியாகவோ, பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ பயமின்றி நடக்க முடியும் என்று சொன்னால், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமீரகம் பாதுகாப்புடனும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க அல்லா அருள்புரியட்டும் என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
الإمارات الأولى عالمياً حسب تقرير جالوب للأمن والنظام ٢٠٢١ في تجوال السكان ليلاً بمفردهم. الأمن نعمة..والأمان طمأنينة وسكينة وحياة.. إذا تجولت المرأة بمفردها في أي ساعة من ليل أو نهار دون خوف فاعلم أنها في الإمارات .. “رب اجعل هذا بلداً آمناً “..آمين ..وأدم عليه سكينته وطمأنينته
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 17, 2021
