அமீரகத்தில் வேறொரு பெண்ணின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பெண்ணுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மேலும் தண்டனை காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படவுள்ளார்.
விமான நிலையத்தில் பாஸ்போர்ட் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் பாஸ்ப்போர்ட்டில் உள்ள முகமும் அவரது முகமும் வித்தியாசமாக இருந்ததை கவனித்துள்ளார். மேலும் அந்த பாஸ்போர்ட் அதிகாரி, பாஸ்போர்ட்டை இயந்திரம் மூலம் சரிபார்த்து, அதிலும் மாற்றம் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
உடனே அவர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அந்த பெண் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவர் வேறொருவர் பாஸ்ப்போர்ட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்றது நிரூபிக்கப்பட்டது. 3 மாதம் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது தண்டனை காலம் முடிந்ததும் அவரை நாடுகடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.