UAE Tamil Web

அமீரகம்.. பிறந்து 15 நிமிடமே ஆனா குழந்தை.. தலையணையால் அமுக்கி கொன்ற “தாய் என்னும் பேய்” – நீதிமன்றம் அளித்த சரியான தண்டனை!

அமீரகத்தில் பிறந்து 15 நிமிடங்களே ஆன தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 28 வயது பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை தொட்டியில் அந்த இறந்த பிஞ்சு குழந்தையின் உடலை தூக்கி வீச அவர் முயற்சித்துள்ளார். அதற்கு முன்னதாக அந்தப் பெண் தனது குழந்தையின் உடலை ஒரு பையில் மூன்று நாட்கள் மறைத்து வைத்திருந்தார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

அந்த பெண் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாகக் கூறினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் வசித்து வந்த கட்டிடத்தின் அருகே இருந்த நடைபாதையில் அந்த பெண் ஒரு பையை எடுத்துச் செல்வதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய சென்றுள்ளார் அந்த இளைஞன்.

பையில் எதோ இருப்பதாய் உணர்ந்த அந்த இளைஞர் ஒரு டாக்ஸியில் ஏறி அந்த பெண்ணுடன் சென்றுள்ளார். இறந்த குழந்தை பையில் உள்ளது என்றும் செல்லும் வழியில் அந்த பையை அருகில் உள்ள குப்பை கிடங்கில் தூக்கி வீசவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

படுபாதக செயலை செய்த பெண்ணின் மீது கோபம்கொண்ட அந்த இளைஞர் அவரிடம் நைசாக பேசி தானே அந்த பையை வேறு இடத்தில் தூக்கி வீசுவதாக அந்த பெண்ணிடம் பொய் கூறி அந்த பையை பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் இறுதியில் அந்த இளைஞர் இறுதியில் அந்த பெண்ணை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களில் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள் படுக்கையில் அந்த சிசுவை படுக்கவைத்து, குழந்தையின் மேல் தலையணையால் அழுத்தி அதை கொன்றுள்ளார் அந்த கொடூரத்தாய்.

போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் அவரை ஒப்படைக்க, அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap