UAE Tamil Web

துபாய்: இன்றுமுதல் மசூதிகளில் பெண்களுக்கான தொழுகை இடங்களை மீண்டும் திறக்க அரசு அனுமதி..!

Sharjah-Mosque

துபாயில் உள்ள மசூதிகளின் இமாம்களுக்கு இன்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கான துறையின் மசூதிகளில் வழங்கப்படும் மத ரீதியிலான சேவைப் பிரிவு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையில்,”இன்று முதல் (7/6.2021) துபாய் முழுவதிலும் உள்ள மசூதிகளில் பெண்களுக்கான பிரார்த்தனைக் கூடங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசூதிகளில் ஆண்களுக்கான பிரார்த்தனைக் கூடங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அனைத்து விதிமுறைகளும் பெண்களுக்கான வழிபாட்டுக் கூட்டத்திற்கும் பொருந்தும் எனவும் பிரார்த்தனையாளர்கள் அதனை கவனமாகப் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharjah-Mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap