UAE Tamil Web

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உலகின் நம்பர் 1 நாடு அமீரகம் – சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட ட்வீட்..!

Sheikh Mohammed (2)

நாளை (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அமீரகத்தின் அறிவியல், பொருளாதாரம் மற்றும் சமூக சாதனைகளில் பங்குபெற்றுள்ள அனைத்து பெண்களுக்கும் ஆட்சியாளர் நன்றி தெரிவித்தார். அதேபோல, அமீரகத்தின் பெருமைமிகு கதைகளுக்கு அஸ்திவாரமிட்ட அனைத்து தாய்மார்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்ப காலந்தொட்டே மகளிர் மேம்பாடு அமீரக அரசின் நோக்கமாக இருந்ததையும் துபாய் ஆட்சியாளர் சுட்டிக்காட்டினார். கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது நிர்வாக குழுவில் 70 சதவீத பெண்களுக்கு இடமளிப்பதாக ஷேக் முகமது அறிவித்தார்.

வீட்டு வன்முறைப் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு உள்ளிட்ட மகளிர் உரிமை சீர்திருத்தங்களை அமீரக அரசு சமீப காலங்களில் மேற்கொண்டுவருகிறது.

2015 ஆம் ஆண்டு 66 சதவீத பொதுத்துறை பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இது உலகிலேயே மிக அதிகமாகும். முடிவெடுப்பது போன்ற முக்கிய மூத்த பொறுப்புகளில் 30 சதவீத பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் அதிக பெண்களுக்கு இடமளிக்கும் நாடு என்றால் உலகிலேயே அது அமீரகம் தான். 40 உறுப்பினர்களைக் கொண்ட அமீரக பெடரல் நேஷனல் கவுன்சிலில் (FNC) 50 சதவீதமானோர் பெண்கள் ஆகும்.

Sheikh Mohammed (2)
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap